ADDED : ஆக 15, 2025 11:27 PM

கொடைக்கானல்:தொடர் விடுமுறையை அடுத்து கொடைக் கானலில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஒரு மணி நேரம் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுதந்திர தினம், விடுமுறை தினம் என 3 நாட்கள் தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் நேற்று காலை முதலே வாகனங்களில் கொடைக்கானலில் முகாமிட்டனர்.
பெருமாள்மலை, வெள்ளி நீர்வீழ்ச்சி, மூஞ்சிக்கல், ஏரிச்சாலை சந்திப்பு என நகரில் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொது போக்குவரத்து வெகுவாக பாதித்தது. மாலைக்கு பின் இயல்பு நிலை திரும்பியது.
வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா,கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, வனச்சுற்றுலா தலம், மன்னவனுார் சூழல் சுற்றுலா தலத்தில் பயணிகள் குவிந்தனர்.
ஏரியில் படகு சவாரி, ஏரி சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்து பயணிகள் மகிழ்ந்தனர். அவ்வப்போது தரையிறங்கிய மேகக் கூட்டம் என சில்லிடும் சீதோஷ்ண நிலையை பயணிகள் அனுபவித்தனர்.