காஷ்மீரில் இருந்து பத்திரமாக தமிழகம் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்; சொல்வது இதுதான்!
காஷ்மீரில் இருந்து பத்திரமாக தமிழகம் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்; சொல்வது இதுதான்!
ADDED : ஏப் 24, 2025 08:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நிகழ்த்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்த நிலையில், சுற்றுலா சென்ற தமிழர்கள் விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்கள் விரைவாக மீட்புக்குழு அமைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
தமிழகம் திரும்பிய சுற்றுலா பயணிகள் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காஷ்மீர்னா இப்படி தான் இருக்குமா? எங்களுக்கு உயிர் பயமே வந்துடுச்சு. தமிழகத்தில் இந்த மாதிரி பிரச்னைலாம் இல்ல நிம்மதியா இருக்கோம்னு தோணுச்சு.
போகும் போது ரொம்ப சந்தோஷமாக தான் சென்றோம். எங்களுக்கு சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

