ADDED : செப் 01, 2011 12:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டோயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத விற்பனை 83.82 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த மாதத்தில் இந்நிறுவனம் 11,693 கார்களை விற்பனை செய்துள்ளது. டோயோட்டாவின் இன்னோவா, இடியோஸ் மற்றும் லிவா உள்ளிட்ட ரக கார்களுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளதால் விற்பனை அதிகரித்திருப்பதாக டோயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 6361 கார்களை மட்டுமே இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.