ADDED : டிச 12, 2025 10:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மத்திய அரசை கண்டித்து, தொ.மு.ச., --- சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., உட்பட, 13 மத்திய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.
அமலில் உள்ள, 29 தொழிலாளர் சட்டங்களை, நான்கு சட்டத் தொகுப்புகளாக மத்திய அரசு உருவாக்கியுள்ளது. கடந்த மாதம் 21 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த மாற்றத்தை கண்டித்து, 13 தொழிற்சங்கங்கள் சார்பில், கடந்த மாதம் 26ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து, அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. அதற்கான அறிவிப்பு, வரும் 22ல் வெளியாக உள்ளதாக, இந்திய நீர் வழி போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலர் நரேந்திர ராவ் கூறியுள்ளார்.

