தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ரயில் பொதுப்பெட்டியை ஆக்கிரமித்த தொழிற்சங்கத்தினர்: பயணிகள் அவதி

 ரயில் பொதுப்பெட்டியை ஆக்கிரமித்த தொழிற்சங்கத்தினர்: பயணிகள் அவதி

 ரயில் பொதுப்பெட்டியை ஆக்கிரமித்த தொழிற்சங்கத்தினர்: பயணிகள் அவதி


ADDED : மே 27, 2026 06:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2026 06:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமேஸ்வரம்--தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயிலின்முன்பதிவில்லா பெட்டியை தொழிற்சங்கத்தினர் ஆக்கிரமித்ததால் பயணிகள் படிகளில் தொங்கியபடி முன்பதிவு பெட்டிகளில் பயணித்தனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து தாம்பரத்திற்கு தினமும் மாலை 6:00 மணிக்கு விரைவு ரயில் (எண் 16752) இயக்கப்படுகிறது. இதில் 4 ஏ.சி., வகுப்பு பெட்டிகள், 12 ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் மற்றும் 4 பொதுப்பெட்டிகள் உள்ளன. ரயிலின் இரு பக்கமும் கடைசியில் தலா இரு பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

நேற்று முன்தினம் மாலை ராமேஸ்வரத்தில் இருந்து ரயில் புறப்படும் போது முன்பகுதியில் உள்ள ஒரு பொதுப்பெட்டியில் பயணிகள் ஏறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஒரு பெட்டி மட்டும் திறந்திருந்ததால் பயணிகள் அனைவரும் பின்பகுதியில் உள்ள பெட்டிகளில் ஏறினர். தொடர்ந்து ராமநாதபுரம், பரமக்குடி, சிவகங்கை வந்த போது பயணிகள் கூட்டம் அதிகரித்தது.

இதனால் அந்த பெட்டியின் கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டு, டி.ஆர்.இ.யு., தொழிற்சங்கத்தின் கொடி பறக்கவிடப்பட்டது.முன்பகுதியில் உள்ள பெட்டியை பயணிகள் திறக்குமாறு ரயில்வே அலுவலர்களிடம் வலியுறுத்தினர். மேலும், 'ரயில் மதாத்' செயலியிலும் புகார் அளித்தனர். அந்த பெட்டி வாடகைக்கு விடப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறியதாவது:

ரயில்வே ஊழியர்கள்பொதுப்பெட்டியில் இலவசமாக செல்வதற்கு மட்டும் தான் அனுமதி உள்ளது. இது போன்று தொழிற்சங்கத்தினர் மொத்தமாக செல்லும் போது கூடுதலாக ஒரு பெட்டியை இணைக்காமல்,பயணிகள் செல்லும் பொதுப்பெட்டியை ஆக்கிரமித்துள்ளனர். பொதுப்பெட்டியை அவர்கள் அடைத்துக்கொண்டதால் முன்பகுதியில் உள்ள பொதுப்பெட்டியை நம்பி வழியில் உள்ள ஸ்டேஷன்களில் காத்திருந்த பயணிகள் பின்னால் உள்ள பொதுப்பெட்டிக்கு ஓடினர். குடும்பத்துடன் வந்தவர்கள் அருகில் இருந்த ஸ்லீப்பர் வகுப்பு பெட்டியிலும், படியில் தொங்கியபடியும் பயணித்தனர்.

இதை ரயில்வே எப்படி அனுமதிக்கிறது என புரியவில்லை, என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us