மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 27, 2025 02:16 AM

சென்னை: தொழிலாளர் சட்டங்களை, நான்கு சட்ட தொகுப்புகளாக மாற்றிய, மத்திய அரசை கண்டித்து, 13 தொழிற்சங்கங்கள் சார்பில், நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த, 29 தொழிலாளர் சட்டங்களை, நான்கு சட்ட தொகுப்புகளாக மாற்றி உள்ளது. இதை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில், தொ.மு.ச., - சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., உட்பட 13 தொழிற் சங்கங்கள் சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னையில் எழும்பூர் ராஜரத்னம் ஸ்டேடியம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், வங்கிகள், போக்குவரத்து ஊழியர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சென்னை துறைமுகம் வளாகத்தில், இந்திய நீர்வழி போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலர் நரேந்திர ராவ் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

