sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வணிகர் நல நிதியுதவி ரூ.5 லட்சமாக அதிகரிப்பு

/

வணிகர் நல நிதியுதவி ரூ.5 லட்சமாக அதிகரிப்பு

வணிகர் நல நிதியுதவி ரூ.5 லட்சமாக அதிகரிப்பு

வணிகர் நல நிதியுதவி ரூ.5 லட்சமாக அதிகரிப்பு


ADDED : ஜூன் 14, 2025 06:28 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வணிகர் நல வாரியத்தில், வணிகர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள், மளிகை, ஜவுளி, காய்கறி, பழ வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நலனுக்காக, தமிழக அரசின் வணிகர் நல வாரியம் செயல்படுகிறது; இது, சிறு, குறு வணிகர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

அதன்படி, நலிவடைந்த வணிகர் குடும்பத்திற்கு, குடும்ப நல நிதி உதவியாக, 3 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதை உயர்த்தி வழங்குமாறு வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில், மே, 5ல் வணிகர் தின மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், 'வணிகர் நல நிதியுதவி 3 லட்சம் ரூபாயில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்' என, தெரிவித்தார். இதை செயல்படுத்தி தற்போது, அரசு உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us