/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அறுபடை வீடு அருட்காட்சியில் தமிழர்களின் பாரம்பரிய கலை
/
அறுபடை வீடு அருட்காட்சியில் தமிழர்களின் பாரம்பரிய கலை
அறுபடை வீடு அருட்காட்சியில் தமிழர்களின் பாரம்பரிய கலை
அறுபடை வீடு அருட்காட்சியில் தமிழர்களின் பாரம்பரிய கலை
ADDED : ஜூன் 18, 2025 06:44 AM
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டு திடலில் அமைக்கப்பட்ட அறுபடை வீடு அருட்காட்சியில் தமிழர்களின் பாரம்பரிய கலைகள் நிகழ்த்தப்படுகிறது.
மதுரை வண்டியூர் டோல் கேட் அருகே உள்ள மைதானத்தில் ஜூன் 22ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டு முகப்பில் அமைக்கப்பட்ட அறுபடை வீடுகளின் அருட்காட்சியை நேற்று முன்தினம் முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
ஹிந்து முன்னணி அமைப்பாளர் ராஜேஷ் கூறியதாவது: அருட்காட்சி காண வரும் பக்தர்களுக்கு தமிழர்களின் பாரம்பரிய கலைகளை தெரிவிக்க, தினமும் மாலை 6:00 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. நேற்று (ஜூன் 17) காவடி சிந்து ஆட்டம், பரதநாட்டியம், ஒயிலாட்டம் நடத்தப்பட்டது. வரும் நாட்களில் மயிலாட்டம், புரவியாட்டம், கும்மியாட்டம், பஜனை, கைலாய வாத்தியம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதுபோல் மாநாட்டு திடலில் தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடுகாட்சிப்படுத்தப்படும்.
வேல் வழிபாடு:திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை ஆகிய அறுபடை கோயிலில் வைத்து வழிபாடு நடத்திய வேல், மதுரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இன்று (ஜூன் 18) மாலை அருட்காட்சியில் வைத்து வழிபாடு நடத்தப்படும். திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள் என ஒவ்வொரு பிரிவினரும் ஒவ்வொரு வேல் சுமந்து வந்து முருகன் சன்னதியில் சேர்ப்பர் என்றார்.