ADDED : அக் 17, 2025 07:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:நல்லழகம்மை செல்லப்பன் அறக்கட்டளை நிறுவனர் செல்லப்பன் வெளியிட்ட அறிக்கை:
நல்லழகம்மை செல்லப்பன் அறக்கட்டளை சார்பில், மரபுக்கவிதை போட்டி அறிவிக்கப்படுகிறது. போட்டிக்கான நுால்கள், 2024, 2025ம் ஆண்டுகளில் வெளியானதாகவும், குறைந்தபட்சம், 100 பக்கங்களிலும் இருக்க வேண்டும் .
மூன்று புத்தகங்களை, 'ந.செல்லப்பன், ஜி.2 ரெங்க விலாஸ், எண்.49, இரண்டாவது தெரு, புவனேஸ்வரி நகர், ஆதம்பாக்கம், சென்னை' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
சிறந்த மரபுக்கவிதை நுால்களுக்கு, முதல் பரிசு 10,000 ரூபாய்; இரண்டாம் பரிசு 7,500 ரூபாய்; மூன்றாம் பரிசு 5,000 ரூபாய் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

