வெளிநாடுகளுக்கு ஆட்கள் கடத்தல்; போலி முகவர்களுக்கு போலீஸ் வலை
வெளிநாடுகளுக்கு ஆட்கள் கடத்தல்; போலி முகவர்களுக்கு போலீஸ் வலை
ADDED : பிப் 10, 2025 05:25 AM

சென்னை: வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தும் போலி முகவர் களை, டெல்டா மாவட்டங்கள் உட்பட 13 மாவட்டங்களில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் தேடி வருகின்றனர்.
'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்ய, மியான்மர், கம்போடியா, லாவோஸ் நாடுகளுக்கு ஆட்களை கடத்தி, சைபர் அடிமைகளாக மாற்றும் போலி முகவர்கள் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போலி முகவர்கள், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலுார், அரியலுார், துாத்துக்குடி, மதுரை, கோவை, ஈரோடு உட்பட, 13 மாவட்டங்களில் அதிகம் செயல்படுவது தெரிய வந்துள்ளது. இவர்களை பிடிக்க தனிப்படை போலீசார், அந்த மாவட்டங்களில் முகாமிட்டு தேடி வருகின்றனர்.
இது குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் கூறுகையில், ''வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்திய போலி முகவர்கள் 28 பேருக்கு, 'லுக் அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
''அவர்களின் கூட்டாளிகள் குறித்து, 13 மாவட்டங்களில் தீவிர விசாரணை நடக்கிறது. சந்தேகத்தின் அடிப்படையில் சிலரிடம் விசாரணை நடக்கிறது. போலி முகவர்கள் விரைவில் சிக்குவர்,'' என்றனர்.

