சேலத்தில் சோகம்; கடன் தொல்லையால் தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை
சேலத்தில் சோகம்; கடன் தொல்லையால் தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை
ADDED : ஜன 28, 2025 11:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் அரிசி பாளையம் அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த பால்ராஜ், ரேகா, ஜனனி தற்கொலை செய்து கொண்டனர்.
சேலம் அரிசி பாளையத்தில் பால்ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவர் வெள்ளி பட்டறை நடத்தி வந்தார். இவர் கடன் தொல்லை காரணமாக சிக்கி தவித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று (ஜன.,28) பால்ராஜ், மனைவி ரேகா மற்றும் மகள் ஜனனி ஆகியோர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

