குற்றவாளியைத் தேடிச்சென்ற போது பரிதாபம்: பெண் போலீஸ் இருவர் பலி
குற்றவாளியைத் தேடிச்சென்ற போது பரிதாபம்: பெண் போலீஸ் இருவர் பலி
ADDED : நவ 04, 2024 09:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே கார் மோதிய விபத்தில், ஸ்கூட்டரில் சென்ற மாதவரம் போலீஸ் ஸ்டேஷன் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ, கான்ஸ்டபிள் நித்யா உயிரிழந்தனர்.
சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே, கார் மற்றும் ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஸ்கூட்டரில் சென்ற மாதவரம் போலீஸ் ஸ்டேஷன் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ, கான்ஸ்டபிள் நித்யா ஆகிய இருவர் பலத்த காயமுற்றனர்.
சம்பவ இடத்திலேயே ஜெயஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் நித்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குற்றவாளியைத் தேடி சென்ற போது விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது. ஒரே போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த பெண் போலீஸ் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.