ADDED : ஏப் 30, 2025 07:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த ராஜா சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார்.
அப்போது அவரது லேப்டாப் காணாமல் போனது. அவர் அளித்த புகாரின்படி மானாமதுரை ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., வசந்தி மற்றும் போலீசார் விசாரித்தனர். லேப்டாப் திருடிய திருச்சி ராம்நகரைச் சேர்ந்த தினேஷ்குமாரை 54, கைது செய்தனர்.

