ரயில் டிக்கெட் முன்பதிவு: முதல் 15 நிமிடத்திற்கு ஆதார் கட்டாயம்
ரயில் டிக்கெட் முன்பதிவு: முதல் 15 நிமிடத்திற்கு ஆதார் கட்டாயம்
ADDED : செப் 17, 2025 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே, ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி. சி., இணையதளம் மற்றும் அதன் செயலியில், 'தத்கால்' டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என, ஏற்கனவே ரயில்வே அமைச்சகம் அறிவித்து உள்ளது.
இதற்கிடையே, 'ஸ்லீப்பர்' உட்பட அனைத்து வகை டிக்கெட்டுகளுக்கும், 'ஆன்லைன்' முன் பதிவு துவங்கிய முதல் 15 நிமிடங்களுக்கு மட்டும், ஆதார் கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி காலை 8:00 முதல் 8:15 வரை, ரயில்வே கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பவர்கள் மட்டுமே, டிக்கெட் முன் பதிவு செய்ய முடியும்.
ஆதார் இணைக்காதவர்கள், காலை 8:15க்கு பின், டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த புதிய நடைமுறை, அக்., 1 முதல் அமலுக்கு வருகிறது.

