
பயில்வான் வேடம்
போடுகிறார் பழனிசாமி
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், முதல்வராக இருந்த பழனிசாமி, சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் காலி இருக்கைகளை பார்த்து பேசிய வீராதி வீரன்; காற்றோடு கத்தி சண்டை போட்டவர். இன்று வெட்டி வசனம் பேசுகிறார். கூவத்துாரில் ஊர்ந் தெடுக்கப்பட்டு டேபிளுக்கு அடியில் ஒளிந்து கிடந்த சூராதி சூரர். சட்டசபையில் வெளிநடப்பு செய்து, வீர வசனம் பேசுகிறார். இறந்தோரை வைத்து, அற்ப அரசியல் செய்கிறார். கரூரில் 41 பேர் இறப்பில், கூட்டணி அரசியல் செய்யும், கேடுகெட்ட அரசியல்வாதியை, தமிழகம் இதுவரை கண்டதில்லை. பா.ஜ., அடிமையான பழனிசாமி, தனக்கொரு அடிமை சிக்க மாட்டாரா என தவம் கிடப்பது, அவரது தவிப்பிலேயே தெரிகிறது. 'வாட்ஸ் ஆப்' வதந்திகளை மட்டும் நம்பி வாழும் பழனிசாமிக்கு உண்மை என்ற வார்த்தையை கூட உச்சரிக்க தகுதியில்லை. தமிழக மக்களிடம் அவரது மயான அரசியல் எடுபடாது. -ரகுபதி தமிழக அமைச்சர், தி.மு.க.,