பல்கலை பணியிடங்கள்: டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்ப முடிவு
பல்கலை பணியிடங்கள்: டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்ப முடிவு
ADDED : அக் 17, 2025 02:26 AM
சென்னை: தமிழக பல்கலைகளில், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை, டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக நிரப்ப வகை செய்யும் சட்ட மசோதாவை, மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள, 22 மாநில பல்கலைகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு, ஆள் சேர்ப்பு பணி, டி.என்.பி.எஸ்.சி.,யிடம் ஒப்படைக்கப்படும். இதனால், தமிழகத்தின் தொலைதுாரப் பகுதிகளில் உள்ள இளைஞர்களும் விண்ணப்பிக்க முடியும்.
ஆள்சேர்ப்பு பணியிலிருந்து பல்கலைகள் விடுபட்டு, கற்பித்தலில் கவனம் செலுத்த, இந்த முடிவு வழிவகுக்கும்.
அவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளில், தனி அலுவலர்களின் பதவி காலத்தை நீட்டிக்க வகை செய்யும் சட்ட மசோதா, அரசின் டெண்டர்களை தமிழக அரசின் இணையதளம் வாயிலாக மேற்கொள்ள வகை செய்யும் சட்ட மசோதா போன்றவை, நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட் டன.