ADDED : அக் 08, 2024 12:34 AM
சென்னை: சென்னை ஐ.ஐ.டி.,யில் உள்ள பிரவர்த்தக் அமைப்பு, இன்ஜினியரிங் இறுதியாண்டு மாணவர்கள், 25 பேருக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி வழங்க உள்ளது.
'மெக்கானிக்கல், புரொடக் ஷன், மேனுபாக்சரிங்' சார்ந்த இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு சார்ந்த நவீன தொழில்நுட்ப பயிற்சி வழங்க, சென்னை ஐ.ஐ.டி.,யின் பிரவர்த்தக் மற்றும் ஸ்வயம் பிளஸ் அமைப்புகள் முன்வந்து உள்ளன.
இதில் சேர விரும்புவோர், https://iitmpravartak.org.in/digital_mfg_practice என்ற இணைப்பின் வாயிலாக, வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வரும் 14 முதல் 26ம் தேதி வரை நடக்க உள்ள வகுப்பில், மாட்யூல்ஸ் மாடலிங், அடிப்படை தயாரிப்பு நுட்பங்கள், டிஜிட்டல் தயாரிப்பு நுட்பங்கள் மற்றும் சுயதொழில் ஆலோசனைகள், 3டி மாடலிங், சி.ஏ.எம்., - சி.என்.சி., மிஷினிங் தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
இதில், தயாரிப்பு சார்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, வகுப்பில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்க உள்ளன.
