உள்ளடக்கத்திற்கு செல்ல

காங்., மாவட்ட தலைவர்களுக்கு பயிற்சி முகாம் இன்று தொடக்கம்
காங்., மாவட்ட தலைவர்களுக்கு பயிற்சி முகாம் இன்று தொடக்கம்
ADDED : ஜூலை 23, 2026 06:13 AM

அ நிறம் | அளவு
சென்னை: வரும் 2029 லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், கட்சி நிர்வாகிகளுக்கு காங்கிரஸ் பயிற்சி அளித்து வருகிறது.
அதன்படி, தமிழக காங்., மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாம், மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆக., 1 வரை, 10 நாட்கள் நடக்கிறது. தமிழக காங்., தலைவர் மாணிக்கம் தாகூர், மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது மீர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
தமிழக காங்., துணைத் தலைவர் கோபண்ணா வெளியிட்ட அறிக்கையில், 'பயிற்சி முகாமில், மாவட்ட தலைவர்களை தவிர, வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, தெரிவித்து உள்ளார்.
