ADDED : அக் 15, 2024 04:24 AM
சென்னை : நகராட்சி கமிஷனர்கள், 10 பேரை இடமாற்றம் செய்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
போடிநாயக்கனுார் நகராட்சி கமிஷனர் ராஜலக்ஷ்மி, தாம்பரம் மாநகராட்சி உதவி கமிஷனராகவும்; திருவாரூர் நகராட்சி கமிஷனர் பிரபாகரன், மதுரை மாநகராட்சி உதவி கமிஷனராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்
நாகர்கோவில் மாநகராட்சி உதவி கமிஷனர் குமரன், கோவை மாநகராட்சி உதவி கமிஷனராகவும்; வால்பாறை நகராட்சி கமிஷனர் விநாயகம், ஆவடி மாநகராட்சி உதவி கமிஷனராகவும் மாற்றப்பட்டு உள்ளனர்
மருத்துவ விடுப்பில் இருந்த நகராட்சி கமிஷனர் பரிஜன், துாத்துக்குடி மாநகராட்சி உதவி கமிஷனராகவும்; திருப்பத்துார் நகராட்சி கமிஷனர் நாராயணன், திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனராகவும்; குன்னுார் நகராட்சி கமிஷனர் சசிகலா, திருச்சி மாநகராட்சி உதவி கமிஷனராகவும் மாற்றப்பட்டு உள்ளனர்
வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் சதீஷ்குமார், வேலுார் மாநகராட்சி உதவி கமிஷனராகவும்; உடுமலைபேட்டை நகராட்சி கமிஷனர் பாலமுருகன், துாத்துக்குடி மாநகராட்சி உதவி கமிஷனராகவும்; விருதுநகர் நகராட்சி கமிஷனர் தமிழ்செல்வி, ஆவடி மாநகராட்சி உதவி கமிஷனராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.