ADDED : ஜன 04, 2024 09:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக காவல்துறையில் தேர்தல் விதிகளின் படி காவலர்துறையினர் இடமாற்றம் செய்யும் பணி அனைத்து மாவட்டங்களில் துவங்கியது.
தேர்தல் நடத்தை விதிகளின் படி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் சொந்தஊரில் பணிபுரியும் காவலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதன்படி துவக்கப்பட்ட நவடிக்கையின் படி சென்னை காவல் துறையில் இருந்து மட்டும் 340 பேர் பிற மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தலைமைகாவலர்கள், முதல்நிலை காவலர்கள், இரண்டாம்நிலை காவலர்கள் பெண்காவலர்கள் என மொத்தம் 1847 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.