நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:டி.ஜி.பி., அலுவலகத்தில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி விஸ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி, சென்னை மாநகர வடக்கு போக்குவரத்து துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
அதேபோல, காத்திருப்போர் பட்டியலில் இருந்த விஜயகுமார், திருநெல்வேலி சிட்டி, தலைமை இடத்து துணை கமிஷனராகவும், சென்னை வடக்கு போக்குவரத்து துணை கமிஷனராக பணிபுரியும் குமார், சென்னை தெற்கு போக்குவரத்து துணை கமிஷனராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுஉள்ளனர்.

