போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: காவல்துறை எச்சரிக்கை
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: காவல்துறை எச்சரிக்கை
ADDED : ஜன 08, 2024 08:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளதையடுத்து தமிழகத்தில் அனைத்து போக்குவரத்து பணிமனைகளிலும் காவல் ஆய்வாளர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வெறிச்சோடியது மாட்டுத்தாவணி பஸ் நிலையம்
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் குறைந்த அளவே இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் கூட்டம் குறைவாக காணப்படுகிறது. தனியார் பஸ் போக்குவரத்து வழக்கம் போல் செயல்படுகிறது.