sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பொங்கலுக்கு சொந்த ஊர் கிளம்பிய பயணிகள்: விமான கட்டணம் 5 மடங்கு உயர்வு

/

பொங்கலுக்கு சொந்த ஊர் கிளம்பிய பயணிகள்: விமான கட்டணம் 5 மடங்கு உயர்வு

பொங்கலுக்கு சொந்த ஊர் கிளம்பிய பயணிகள்: விமான கட்டணம் 5 மடங்கு உயர்வு

பொங்கலுக்கு சொந்த ஊர் கிளம்பிய பயணிகள்: விமான கட்டணம் 5 மடங்கு உயர்வு

13


ADDED : ஜன 13, 2024 01:55 PM

Google News

ADDED : ஜன 13, 2024 01:55 PM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் இருந்து கோவை, மதுரைக்கு விமான கட்டணம் 5 மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு வழக்கமாக ரூ.3,367 இருந்த கட்டணம் தற்போது ரூ.17,262 ஆக உயர்ந்துள்ளது. பொங்கலுக்கு சொந்த ஊர் கிளம்பிய பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை வரும் ஜன.,15ம் தேதி திங்கள் கிழமை முதல் கொண்டாடப்பட உள்ளது. இன்றும்(ஜன.,13), நாளையும்(ஜன.,14) சனி, ஞாயிறு விடுமுறை ஆகும். வரும் ஜன.,15,16,17 ஆகிய தினங்கள் பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் கொண்டாட மக்கள் அனைவரும் ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். சாலைகளில் கடும் போக்குவரத்து ஏற்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து தென்மாவட்டங்கள் மற்றும் திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு செல்பவர்கள் ஏராளமானோர் விமானத்தில் முன்பதிவு செய்து வருகின்றனர்.

சென்னையில் இருந்து கோவை, மதுரைக்கு விமான கட்டணம் 5 மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னை-தூத்துக்குடி இடையேயான வழக்கமான விமானக் கட்டணம் ரூ.3,624 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.13,639 ஆகவும், சென்னை-மதுரை ரூ.3,367 இல் இருந்து ரூ.17,262 ஆகவும், சென்னை-திருச்சி ரூ.2,264 இல் இருந்து ரூ.12,369, சென்னை-கோவை ரூ.14,659 ஆக அதிகரித்துள்ளது. பொங்கலுக்கு சொந்த ஊர் கிளம்பிய பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us