த.வெ.க.,ஒழுங்கு நடவடிக்கை குழு அமைப்பு : விஜய் அறிவிப்பு
த.வெ.க.,ஒழுங்கு நடவடிக்கை குழு அமைப்பு : விஜய் அறிவிப்பு
ADDED : ஏப் 30, 2025 06:29 PM

சென்னை: தமிழக வெற்றி கழகம் சார்பாக, ஒழுங்கு நடவடிக்கை குழு மற்றும் மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன.
கட்சி தலைவர் விஜய் அறிக்கை:
கழக விதிகளின்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவரே, தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் ஆவார். இதன்படி, கழகத் தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
உறுப்பினர் 1. என். ஆனந்த், கழகப் பொதுச் செயலாளர்,
உறுப்பினர் 2. சி.விஜயலட்சுமி, மாநிலச் செயலாளர், உறுப்பினர் சேர்க்கை அணி.
இக்குழுவானது, கழகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகளும் தோழர்களும் கழகக் கட்டுப்பாட்டை மீறி, கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்களுக்கு எதிராகச் செயல்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இக்குழுவிற்குக் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.
இவ்வாறு விஜய் அறிக்கையில் கூறியுள்ளார்.

