ADDED : செப் 23, 2011 10:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோல்கட்டா: மணிப்பூர் மாநிலத்தில், 4.5 ரிக்டர் அளவுக்கு, நில அதிர்வு காணப்பட்டது.
சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், கடந்த சில நாட்களுக்கு முன், பூகம்பம் ஏற்பட்டது. நூற்றுக்கும் அதிகமானவர்கள், இந்த பூகம்பத்தில் பலியானார்கள். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் மாவட்டத்தில், நேற்று 4.5 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு காணப்பட்டது. எனினும், இந்த நில அதிர்வால் பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.