தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'டிஜிட்டல் ' ஆவணமாகிறது பழங்குடியினர் கலாசாரம்

 'டிஜிட்டல் ' ஆவணமாகிறது பழங்குடியினர் கலாசாரம்

 'டிஜிட்டல் ' ஆவணமாகிறது பழங்குடியினர் கலாசாரம்


ADDED : ஜன 24, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 06:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் உள்ள பழங்குடியின மக்களின் மொழி மற்றும் கலாசார ஆவணங்களை, டிஜிட்டல் மயமாக்கும் பணியை, தமிழக அரசு துவக்கி உள்ளது.

தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், விளிம்பு நிலையில் உள்ள, பழங்குடியினர் மொழி மற்றும் கலாசாரத்தை பாதுகாக்கும் நோக்கில், 'தொல்குடி' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக, நரிக்குறவர், தோடர், காணி, சோளர் மற்றும் கோத்தர் இன மக்களின் மொழிகளை, அரசு ஆவணமாக்கி வருகிறது.

தற்போது, 'தொல்குடி' திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளை, அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

அதன்படி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வசிக்கும் பள்ளியர்; கோத்தகிரி, குன்னுார் பகுதி யில் உள்ள ஆலுக்குரும்பர்; நரிக்குறவர் உட்பட 36 வகை பழங்குடியினர் மக்கள் பேசும் மொழிகள் மற்றும் அவர்களின் கலாசார அம்சங்களை, அரசு 'தொல்குடி.இன்' என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து ஆவணப்படுத்தப்படுகிறது.

இது குறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடந்த, 2024 செப்டம்பரில், சென்னையில் தேசிய அளவில் தொல்குடி மாநாடு நடத்தப்பட்டது.

'யுனெஸ்கோ' மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மொழி வல்லுநர்களுடன் ஆலோசித்து, முதல் கட்டமாக, நரிக்குறவர் பேசும், 'வாக்கிரி பூலி', தோடர் இன மக்கள் பேசும் 'தோடா' மொழி உட்பட ஐந்து மொழிகளை ஆவணப்படுத்தி வருகிறோம்.

இதன் தொடர்ச்சியாக, தற்போது 'தொல்குடி.இன்' இணையதளம் துவக்கப்பட்டு, அதில் அரசு பல்கலைகள், தொண்டு நிறுவனங்கள் வழியே, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை, 'டிஜிட்டல்' ஆவணங்களாக பதிவு செய்து வருகிறோம்.

இதுவரை பழங்குடியினர் வகுப்பை சார்ந்த 61 ஆடியோ, 230 வீடியோ உட்பட 600க்கும் மேற்பட்ட ஆவணங்கள், 'டிஜிட்டல்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us