மது குடிக்கும் போராட்டம் த.வெ.க., தடாலடி அறிவிப்பு
மது குடிக்கும் போராட்டம் த.வெ.க., தடாலடி அறிவிப்பு
ADDED : மார் 20, 2025 08:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்:மது குடிக்கும் போராட்டம் சேலம் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
த.வெ.க., சார்பில், சேலம் மாவட்டம் ஆத்துார், ரயிலடி தெருவில் உள்ள, டாஸ்மாக் கடையை மூடக்கோரி, அங்குள்ள பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு, சேலம் மத்திய மாவட்ட செயலர் பார்த்திபன் பேசியதாவது:
தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, 20 அடி துாரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தும் குடிமகன்கள், அந்த வழியே செல்லும் மாணவியர், பெண்களை கேலி, கிண்டல் செய்வது தொடர்கிறது. இந்த கடையை உடனே மூட வேண்டும். இல்லையெனில், த.வெ.க., குடும்பத்தினர், பெண்கள், மாணவர்கள் திரண்டு, கடை முன், 'மது குடிக்கும்' போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

