UPDATED : அக் 10, 2026 12:00 AM
ADDED : அக் 09, 2026 09:54 PM
செஸ் போட்டி நிறைவு விழாவில், ‘பட்டம்’ இதழ் ஆசிரியர் வெங்கடேஷ், வி.ஐ.டி., பல்கலை கூடுதல் பதிவாளர் மனோகரன், இணை துணை வேந்தர் தியாகராஜன், ‘தினமலர்’ விளம்பரப் பிரிவு இணை பொது மேலாளர் சேகர், தலைமை நடுவர் ரவிகுமார் ஆகியோர், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பைகளை வழங்கினர்.
வி.ஐ.டி., பல்கலை கூடுதல் பதிவாளர் மனோகரன் பேசியதாவது:
வி.ஐ.டி.,யின் மகாத்மா காந்தி அரங்கில், நிகழ்ச்சி நடக்காத நாட்களே இல்லை. இன்றைய நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பு உள்ளது. பெரும்பாலும் கல்லுாரி மாணவர்களால் அலங்கரிக்கப்படும் இந்த அரங்கம், இன்று பள்ளி மாணவர்களால் மேலும் அழகாக காட்சியளிக்கிறது.
பிரமாண்டத்திற்கு இலக்கணமாகத் திகழும் ‘தினமலர்’ நாளிதழும், வி.ஐ.டி.,யும் இணைந்து நடத்தும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் தனிச்சிறப்பு இருக்கும். போட்டியில் வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும், அதில் பங்கேற்கும் அனுபவம்தான் முக்கியம்.
விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றால், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாது என்ற பெற்றோரின் எண்ணம் தவறானது. கடின உழைப்பு இருந் தால், வெற்றி தானாக வரும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
