ADDED : மார் 11, 2024 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொப்பூர் : டில்லியில் இருந்து, பார்சல் சர்வீஸ் கன்டெய்னர் லாரி சேலத்துக்கு புறப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நாராயண சர்மா, 35, ஓட்டினார். தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதியில் நேற்று அதிகாலை லாரி வந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, இரட்டைப்பாலம் அருகே சாலையின் இடது புறத்தில், 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. நாராயண சர்மா சிறு காயங்களுடன் தப்பினார். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

