UPDATED : மார் 20, 2025 03:05 PM
ADDED : மார் 20, 2025 01:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடந்தது.
அப்போது ஆத்தூர் ரயிலடி தெருவில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து, சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பார்த்திபன் பேசும்போது, 'ரயிலடி தெருவில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றவில்லை எனில் அந்த கடையின் முன், தமிழக வெற்றிக்கழக குடும்பத்தினர், பெண்கள் உள்ளிட்டோர் ஒன்று சேர்ந்து கடையின் முன் குடிக்கும் போராட்டம் நடத்துவோம்' என பேசினார்.