த.வெ.க., மாநாடு மிகப்பெரிய வெற்றி: ரஜினி வாழ்த்து
த.வெ.க., மாநாடு மிகப்பெரிய வெற்றி: ரஜினி வாழ்த்து
ADDED : நவ 01, 2024 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : ''தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது; நடிகர் விஜய்க்கு என் வாழ்த்துக்கள்,'' என, நடிகர் ரஜினி கூறினார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டின் முன், நேற்று காலை அவரது ரசிகர்கள் திரண்டிருந்தனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி, 'ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், சந்தோஷமாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும்' என்றார்.
அப்போது ரஜினியிடம், 'டிவி' நிருபர்கள் சிலர், 'சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த விஜய், தன் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தியது குறித்து உங்களின் கருத்து என்ன?' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ரஜினி, ''த.வெ.க., மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது; விஜய்க்கு என் வாழ்த்துக்கள்,'' என்றார்.