தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அரசு விழா மேடையில் த.வெ.க., நிர்வாகிகள் எம்.எல்.ஏ., வெளியேறியதால் பரபரப்பு

அரசு விழா மேடையில் த.வெ.க., நிர்வாகிகள் எம்.எல்.ஏ., வெளியேறியதால் பரபரப்பு

அரசு விழா மேடையில் த.வெ.க., நிர்வாகிகள் எம்.எல்.ஏ., வெளியேறியதால் பரபரப்பு


UPDATED : அக் 15, 2026 06:25 PM

ADDED : அக் 15, 2026 05:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 06:25 PM ADDED : அக் 15, 2026 05:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் நடந்த அரசு விழாவில், த.வெ.க., நிர்வாகிகளை மேடையில் அமர வைத்ததால், தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., டென்ஷன் ஆகி கூட்டத்தில் பங்கேற்காமல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தலைஞாயிறு, பேரூராட்சி சமுதாய கூடத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறை சார்பில்,109 கர்ப்பிணி தாய்மார்களுக்கு, சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரவீன்குமார், தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஓ.எஸ்.மணியன் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

விழாவிற்கு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வராத நிலையில், விழா ஏற்பாடுகளை செய்த த.வெ.க., பிரமுகர்களை மேடையில் காலியாக கிடந்த நாற்காலிகளில், அமர வைக்கப்பட்டனர். அந்த சமயத்தில், விழாவிற்கு வந்த ஓ.எஸ்.மணியன், மேடையில் த.வெ.க.,வினர் கட்சி துண்டுடன் அமர்ந்திருப்பதை பார்த்து டென்ஷன் ஆகி, கூட்டத்தில் பங்கேற்காமல் வெளியேறினார்.

அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் அலுவலர்கள் ஈடுபட்டனர். அப்போது, ‘இது அரசு விழாவா, த.வெ.க., விழாவா, சுந்திர தினத்தன்று தேசியக் கொடிக்கு பதிலாக த.வெ.க., கொடி ஏற்றினால் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டவர் அங்கிருந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கூறுகையில், நிகழ்ச்சியை இங்கு நடத்த முடிவு செய்ததில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் வரை, அனைத்து வகையிலும் உதவியாக இருந்தவர்கள், மேடையில் காலியாக இருந்த நாற்காலிகளில் மரியாதை நிமித்தமாக அமருமாறு கூறினோம். அவர்கள் த.வெ.க., என்பதால் துண்டோடு அமர்ந்தனர். இதை அரசியலாக்குகின்றனர் என, தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us