ADDED : டிச 11, 2025 03:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக மக்களையே வென்றெடுக்க முடியாத த.வெ.க., தலைவரும் நடிகருமான விஜய், புதுச்சேரி மக்களை வென்றெடுப்பேன் என்று கூறி உள்ளார். அவர் பேசுவது, கூரையேறி கோழி பிடிக்காதவர், வானம் ஏறி வைகுண்டம் காட்டுவேன் என்பது போல உள்ளது.
அவர், சினிமாவில் வசனம் பேசியவர். அதே பாணியில் அரசியல் மேடைகளிலும் பேசத் துவங்கி உள்ளார். அவர் பேசுவது, சினிமா பேச்சு என்பது மக்கள் அறிந்ததுதான்.
அவர் இதுவரை தன்னை ஒரு அரசியல் சக்தியாக நிரூபிக்கவில்லை. முதலில் அவர் தேர்தலில் நிற்கட்டும். சில இடங்களில் வென்று காட்டட்டும். அதன்பின், தமிழகத்தில் ஆட்சி அமைக்கட்டும். அதையடுத்து, புதுச்சேரிக்கு செல்லட்டும். ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் நடிகர் விஜய் தான்.
- கோவி.செழியன்
தமிழக அமைச்சர், தி.மு.க.,

