ADDED : டிச 11, 2025 03:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி அரசை பார்த்து, தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும் என, புதுச்சேரியில் நடந்த த.வெ.க.,பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியுள்ளார்.
கரூரில், விஜய் நடத்திய ரோடு ஷோவில் 41 பேர் பலியானார்கள். அதைத் தொடர்ந்து, ஒரு மாத காலம் கட்சிக்கு லீவு விட்ட விஜய், நீதிமன்ற உத்தரவுக்குப்பின், புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்.
கரூரில், தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்பது போல பேசியிருக்கிறார். விஜய் கூறுவதை போல தமிழக அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் இருந்திருந்தால், கரூரில் இறந்தோர் எண்ணிக்கை 300க்கும் அதிகமாக இருந்திருக்கும். இது விஜய்க்கும் தெரியும். தெரிந்திருந்தும் அவர் தமிழக அரசை குறை கூறுகிறார்.
- அன்பரசன்
தமிழக அமைச்சர், தி.மு.க.,

