தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/த.வெ.க., – எம்.எல்.ஏ.,வுக்கு குவியும் கண்டனம்

த.வெ.க., – எம்.எல்.ஏ.,வுக்கு குவியும் கண்டனம்

த.வெ.க., – எம்.எல்.ஏ.,வுக்கு குவியும் கண்டனம்


ADDED : நவ 10, 2026 08:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2026 08:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி:

‘உள்ளாடையுடன் நிற்க வைப்பேன்’ என, மிரட்டும் அமைச்சர்; மனு கொடுக்க வந்தவரை தாக்கி, ஆபாச அர்ச்சனை செய்து, அதை மறைக்க முயலும் துணை சபாநாயகர்; எல்லாவற்றுக்கும் மேலாக, கலெக்டருக்கே ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய எம்.எல்.ஏ., என, த.வெ.க.,வை சேர்ந்தோர், சட்டம் – ஒழுங்கை காக்கும் லட்சணம், பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.

தங்கள் கட்சியினர் தவறு செய்தால், வாய்மூடி மவுனியாக இருக்கும் அரசு, மற்ற கட்சியினர் செய்திருந்தால், இன்று அனைத்து மைக்குகள் முன்பும், எவ்வளவு பேசி இருப்பர்? நுாலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும், தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள, எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்க, முதல்வர் பயப்படுகிறாரா; ஓட்டளித்த மக்களின் பாதுகாப்பை விட, முதல்வர் நாற்காலி தான் முக்கியமென கருதுகிறாரா?

* தி.மு.க., துணை பொதுச் செயலர் கனிமொழி: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., ஒன்றுமே நடக்கவில்லை என்று பேசுகிறார். அப்படியானால், திடீரென கலெக்டருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவசியம் என்ன? இத்தனை நாட்களாக இல்லாமல், புதிதாக ஒரு காவல் துறை அதிகாரியை நியமித்து, அவருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? இதற்கும் ஏதாவது ஒரு திரைக்கதை, வசனம் எழுதி, ஒரு காரணத்தைச் சொன்னாலும் சொல்வர். அரசின் நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரிக்கே இதுபோன்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

* காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி: மாவட்ட கலெக்டருக்கு த.வெ.க., – எம்.எல்.ஏ., ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உண்மை எனில், முறையாக விசாரித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள கலெக்டர்களில், 50 சதவீதம் பேர் பெண்கள். அவர்களின் உழைப்பு, திறமை, நிர்வாகத் திறன் மீது, முதல்வருக்கு உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை இது காட்டுகிறது. ஆனால், இதுபோன்ற மோசமான செயல்கள், ஆட்சிக்கும், கட்சிக்கும் களங்கம் விளைவிக்கக் கூடியவை. இதை வளரவிடாமல் ஆரம்பத்திலேயே தடுக்க, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: மேடைக்கு மேடை பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் இல்லை என, வெட்கமில்லாமல் பேசுவதற்கு முன்பாக, தங்கள் கட்சியில் இருப்பவர்களின் ஒழுக்கக்கேடான செயல்களை கண்மூடி வேடிக்கை பார்க்காமல், எம்.எல்.ஏ., மீது எழுந்திருக்கும் புகாரை விரிவான விசாரணைக்கு உட்படுத்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு முதல்வர் விஜய் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

* தே.மு.தி.க., தலைவர் பிரேமலதா: பெண்களைப் பாதுகாக்கும் அரசு என்று பெருமை பேசும் முதல்வர் ஆட்சியில், ஒரு பெண் மாவட்ட கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருப்பது, தமிழக அரசின் நிர்வாக அவலத்தையே வெளிப்படுத்துகிறது.

* ஏ.பி.வி.பி., அமைப்பின் மத்திய செயலாக்க குழு உறுப்பினர் வேதாஞ்சலி: கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டருக்கு, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக வரும் செய்திகள், அதிர்ச்சி தருகின்றன. தமிழகத்தில் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கே, பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதையே, இச்சம்பவம் காட்டுகிறது.

இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us