sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அமெரிக்க வரியால் தொழில்துறை பாதிக்காமல் இருக்க நடிகர் விஜயின் 11 யோசனைகள்!

/

அமெரிக்க வரியால் தொழில்துறை பாதிக்காமல் இருக்க நடிகர் விஜயின் 11 யோசனைகள்!

அமெரிக்க வரியால் தொழில்துறை பாதிக்காமல் இருக்க நடிகர் விஜயின் 11 யோசனைகள்!

அமெரிக்க வரியால் தொழில்துறை பாதிக்காமல் இருக்க நடிகர் விஜயின் 11 யோசனைகள்!

8


ADDED : ஆக 31, 2025 03:58 PM

Google News

ADDED : ஆக 31, 2025 03:58 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; அமெரிக்க வரிவிதிப்பு நடைமுறையில் இருந்து இந்திய தொழில்களை பாதுகாக்க மத்திய மற்றும் தமிழக அரசுக்கு 11 யோசனைகளை கோரிக்கைகளாக தவெக தலைவர் நடிகர் விஜய் முன் வைத்து உள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை விவரம்;

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 50 சதவீத வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அமெரிக்க வணிகர்கள் இந்தியப் பொருட்களை வாங்குவதைத் தவிர்த்து வருகின்றனர். இது தமிழக ஏற்றுமதியாளர்களின் தலையில் விழுந்த மிகப் பெரிய 'இடி' ஆகும்.

'உலகளாவிய தெற்கின் குரல்' என்று கூறும் மத்திய அரசும், தமிழகத்தை ஆளும் திமுக அரசும், தொழில் மற்றும் வேலை வாய்ப்பை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இரு அரசுகளுக்கும் தமிழக வெற்றிக் கழகம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறது.

1. தொழில் துறை, தொழில்முனைவோர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க, விரைவாகவும் தீர்க்கமாகவும் செயல்படக் கூடிய, தொழில் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகளை (குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து) உள்ளடக்கிய மத்திய-மாநில அளவிலான கூட்டுப் பணிக்குழுவை உருவாக்க வேண்டும்.

2. வரிவிதிப்புக் காரணமாகச் செலவினங்கள் அதிகரிப்பு மற்றும் கொள்முதல் ஆணைகள் (Purchase Orders) ரத்து போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ளும் சிறு, குறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களை ஆதரிப்பதற்காக மத்திய அரசு ஒரு சிறப்பு ஏற்றுமதி நிலைப்படுத்தல் நிதியை உருவாக்க வேண்டும்.

3. பாதிப்பிற்கு உள்ளாகும் தொழிலாளர்களையும் நிறுவனங்களையும் பாதுகாக்க, தமிழக அரசு அவர்களின் ஊதியத்திற்கு உத்தரவாதம் தருவது. மானியக் கடன் வழங்குவது போன்ற நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

4.கடன் வழங்கும் செயல்முறையை எளிதாக்க, பாசல்-3 விதி முறைகளிலிருந்து MSME நிறுவனங்களை நீக்கி, அதற்கான எளிய வங்கி கொள்கையை அறிமுகப்படுத்த வேண்டும்.

5. கூடுதல் வரியால் பாதிக்கப்பட்ட துறைகளில் MSME நிறுவனங்கள் பெற்ற கடனில் 5% தள்ளுபடி வழங்கும் வகையில் மத்திய அரசு ஒரு பிரத்யேக வட்டி மானியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

6. பாதிக்கப்பட்ட அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் நிலுவையில் உள்ள கடனில் 30% வரை பிணையமில்லாத கடன்களை அனுமதிக்கும் அவசரக் கடன் உத்தரவாதத் திட்டத்தை (ECLGS) மீண்டும் நடைமுறைப்படுத்தி அதனை விரிவுபடுத்த வேண்டும்.

7. வரிவிதிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அவர்கள் வாங்கியிருக்கும் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்து இரண்டு ஆண்டு காலத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்.

8. வரிவிதிப்பினால் ஏற்பட்டிருக்கும் சுமையை ஈடுசெய்ய, பருத்தி மற்றும் பிற மூலப் பொருள்களின் மீதான இறக்குமதி வரியைத் தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும்.

9. அமெரிக்காவைத் தவிர பிற நாடுகளுக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களின் ஏற்றுமதியை அதிகரிக்க ஒரு சிறப்புச் செயல் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும்.

10. ஏற்றுமதியைப் பெருமளவு நம்பியிருக்கும் பல்வேறு துறைகளின் தொழிலாளர்களுக்குத் தற்காலிக நலத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

11. அமெரிக்காவிற்கு அப்பால் ஏற்றுமதிகளைப் பன்முகப்படுத்த MSME நிறுவனங்களுக்கு உதவும் வகையில் சிறப்பு நிதித் தொகுப்பினை ஏற்படுத்த வேண்டும்.

பொருளாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் துரிதமாக முன்னெடுத்து, தமிழக ஏற்றுமதியாளர்களையும் ஏற்றுமதி சார்ந்த தொழில்களையும் தொழிலாளர்களையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு நடிகர் விஜய் அறிக்கையில் கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us