அமைச்சர் - எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் மோதல் இருவர் மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் - எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் மோதல் இருவர் மருத்துவமனையில் அனுமதி
ADDED : ஜூலை 13, 2025 12:58 AM
முதுகுளத்துார்:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரில் தி.மு.க., சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடக்க இருந்த போது அமைச்சரின் உதவியாளர் டோனியை, எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா ஆதரவாளர்கள் தாக்கினர்.
முதுகுளத்துார் --பரமக்குடி ரோட்டில் தனியார் மகாலில் 'ஓரணியில் தமிழ்நாடு' ஆலோசனை கூட்டம் நடந்தது. தொகுதி எம்.எல்.ஏ.,வான அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் அவரது உதவியாளர் டோனி ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா எம்.எல்.ஏ., ஆதரவாளரான கடலாடி தெற்கு ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன், இளைஞரணி அமைப்பாளர் முரளிதரன் ஆகியோர் டோனி மற்றும் அவரது ஆதரவாளர்களை தாக்கினர்.
இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் காயமடைந்த டோனி, முரளிதரன் இருவரும் முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
டோனி புகாரில் போலீசார் மகாலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்கின்றனர்.ஏற்கனவே டோனிக்கும், மாயகிருஷ்ணனுக்கும் டெண்டர் எடுப்பதில் பிரச்னை இருந்தது குறிப்பிடத்தக்கது.

