ADDED : மார் 18, 2024 01:23 AM
துாத்துக்குடி: சாத்தான்குளம் அருகே குளத்தில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு அதில் குதித்து வீடியோ பதிவிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வாழத்துாரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் என்ற ரஞ்சித் பாலா 23. சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பாராட்டு பெறுவதற்காக அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டார். சாத்தான்குளம் அருகே தருவைகுளம் குளத்தில் பெட்ரோல் ஊற்றி அதில் தீ வைத்தனர்.
பின்னர் அந்த தீக்குள் ரஞ்சித் பாலா குதித்து வெளியே வரும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.
இத்தகைய பதிவுகள் பொதுமக்களிடையே பீதியையும் தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்துகிறது. தட்டார்மடம் போலீசார் ரஞ்சித் பாலா, சிவக்குமார் 19, ஆகியோரை கைது செய்தனர். இசக்கி ராஜா 19, என்பவரை தேடி வருகின்றனர்

