உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மார் 25, 2026 10:22 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தங்கப்பா நகரை சேர்ந்த ராஜேஷ்குமார் மகன் ஹரிஷ் 19. இவரது நண்பர் ஐயப்பன் கோவில் தெரு செல்வகுமார் மகன் பிரசன்னா 20. இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டுள்ளனர். சமீபத்தில் கத்தியை காட்டி வன்முறையை துாண்டும் வகையில் வீடியோ பதிவிட்டுள்ளனர்.
வலைதள பக்கங்களை கண்காணிக்கும் ராமநாதபுரம் போலீசார் இதை கண்டறிந்து பஜார் போலீசில் புகார் அளித்தனர். எஸ்.ஐ., செந்தில்குமார் இருவரையும் கைது செய்தார்.
