ADDED : ஆக 22, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு:ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை கூறி, 1.6 கோடி ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு சைபர் கிரைம் போலீசில், கல்பாத்தியை சேர்ந்த ஒருவர், ஆன்லைன் வாயிலாக 'ஷேர் டிரேடிங்' செய்து பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி, 1.02 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக குறிப்பிட்டார். அதே போன்று, நெம்மாராவை சேர்ந்தவர், 58.77 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக புகார் தெரிவித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், கல்பாத்தியை சேர்ந்தவரை ஏமாற்றி பணம் பறித்த, கோழிக்கோடு மாவட்டம், திருவம்பாடியை சேர்ந்த யூனஸ், 25, என்பவரை, நேற்று கைது செய்தனர்.
நெம்மாராவைச் சேர்ந்தவரை ஏமாற்றி பணம் பறித்த, குஜராத் மாநிலம், சூரத்தைச் சேர்ந்த மண்டல்ராஜே, 19, என்பவரையும், நேற்று கைது செய்தனர்.