தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வாடகை தாய் சட்ட விதிகளை மீறிய இரண்டு பேர் கைது

வாடகை தாய் சட்ட விதிகளை மீறிய இரண்டு பேர் கைது

வாடகை தாய் சட்ட விதிகளை மீறிய இரண்டு பேர் கைது


ADDED : மார் 08, 2024 10:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2024 10:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:வாடகை தாய் சட்ட விதிமுறைகளை மீறிய, இருவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். மோசடிக்கு உதவிய மருத்துவமனை மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மக்கள் நல்வாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை மாவட்ட வாடகை தாய் சட்ட மருத்துவ குழுவில் ஆஜரான, குழந்தை விரும்பும் தம்பதியிடம் விசாரணை நடந்தது. வாடகை தாயாக அழைத்து வரப்பட்ட ராதிகா என்பவர், தனக்கு ஏற்கனவே கோபி என்பவருடன் எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து, இரண்டு குழந்தைகள் இருப்பதாக தெரிவித்தார்.

கணவர் கோபி பெயரில் அழைத்து வந்த நபரை விசாரித்த போது, அவரும் தன் பெயர் கோபி என்றாலும், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் பெயரை விசாரித்த போது, அவரால் விபரம் கூற முடியவில்லை.

சந்தேகத்தின் அடிப்படையில், அரசு சார்ந்த ஆவணங்களை கேட்ட போது, அவரிடம் எதுவும் இல்லை. தீவிர விசாரணையில், வாடகை தாயாக வந்தவர்கள் ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக் கொண்டனர். வாடகை தாய் சட்டத்தின்படி, வாடகை தாயாக இருக்கும் பெண்ணின் கணவரின் ஒப்புதல் பெறுவது கட்டாயம்.

இதுபோன்ற சட்ட விதிகளை மீறுவோர், ஆள்மாறாட்டம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த இருவரும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்.

வாடகை தாய் சட்ட விதிகளை மீறிய கிளவுட் நைன் மருத்துவமனை மற்றும் தனிநபர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள, மருத்துவ மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குனர் இளங்கோ மகேஸ்வரனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us