இலங்கை விடுவித்த இரு மீனவர்கள் தமிழகம் திரும்பினர்
இலங்கை விடுவித்த இரு மீனவர்கள் தமிழகம் திரும்பினர்
ADDED : ஆக 01, 2025 09:38 PM
சென்னை:இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இருவர், நேற்று முன்தினம் சென்னை திரும்பினர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் எட்டு பேர், கடந்த டிசம்பரில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
அதிகாலை பாம்பன் பகுதியில், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடலோர காவல் படையினர் அவர்களை கைது செய்தனர். பின், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களை விடுவிக்க, இந்திய துாதரக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் பயனாக, ஆறு மீனவர்கள் இரு மாதங்களுக்கு முன் விடுவிக்கப்பட்டனர். சிறையில் இருந்த மற்ற இரு மீனவர்களான யாசின், பத்திரியப்பன் ஆகியோர், கடந்த 25ம் தேதி, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் இரவு விமானம் வாயிலாக சென்னை அழைத்து வரப்பட்டனர். பின், அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில், சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

