தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வெவ்வேறு விபத்தில் இருவர் பலி

வெவ்வேறு விபத்தில் இருவர் பலி

வெவ்வேறு விபத்தில் இருவர் பலி


UPDATED : நவ 16, 2026 06:54 PM

ADDED : நவ 16, 2026 06:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 06:54 PM ADDED : நவ 16, 2026 06:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூளகிரி: கிருஷ்ணகிரி ராசுவீதியில் உள்ள பனகார தெருவை சேர்ந்தவர் அமீன், 23. இருசக்கர வாகன மெக்கானிக். கடந்த, 14ம் தேதி இரவு, 9:00 மணிக்கு, ஓசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேலுமலை அருகே, ‘யமஹா’ பைக்கில் சென்றார்.

அப்போது பின்னால் வந்த, கிருஷ்ணகிரி மகாராவ் காலனியை சேர்ந்த வாசுதேவகுமார், 42, என்பவர், ஓட்டி சென்ற யமஹா ஸ்கூட்டரால், அமீன் சென்ற பைக்கின் பின்னால் மோதினார்.

இதில் படுகாயமடைந்த அமீன், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* தேன்கனிக்கோட்டை அடுத்த, கக்கதாசம் அருகே திருமளிகை பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மனைவி கமலம்மா, 60; விவசாயி. நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, தேன்கனிக்கோட்டை – தளி சாலையில் ‘டி.வி.எஸ்., விக்டர்’ பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றார்.

அவரது மகன் வேணுகோபால் பைக்கை ஓட்டி சென்றார். மாயநாயக்கனப்பள்ளி பிரிவு ரோடு அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த ‘பிக்அப்’ வாகன டிரைவர், பைக் மீது மோதினார்.

நிலைதடுமாறி சாலையில் விழுந்த கமலம்மா மீது, பிக்அப் வாகனம் ஏறி இறங்கியது. இதில், தன் மகன் கண் முன்னே, சம்பவ இடத்திலேயே கமலம்மா பலியானார். டிரைவர் தப்பியோடி தலைமறைவானார். தளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us