தி.மலை கோவில் பிரகாரத்தில் பிரியாணி சாப்பிட்ட இருவர்
தி.மலை கோவில் பிரகாரத்தில் பிரியாணி சாப்பிட்ட இருவர்
ADDED : ஜூன் 10, 2025 06:00 AM

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் இருவர் பிரியாணி சாப்பிட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். நேற்று மதியம், 1:00 மணியளவில், ஆண், பெண் என இருவர், ஐந்தாம் பிரகாரத்தில் அமர்ந்து முட்டை, இறைச்சியுடன் பிரியாணி சாப்பிட்டனர்.
அதிர்ச்சியடைந்த பக்தர்கள் அளித்த தகவலில், அவர்கள் இருவரையும் கோவில் ஊழியர்கள் பிடித்து, திருவண்ணாமலை டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவிலின், நான்கு கோபுர வாயில்களிலும் பக்தர்களை சோதனை செய்த பின்பே அனுமதிக்க, போலீசார் பணியில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கண்டுகொள்ளாமல், பக்தர்களை உள்ளே செல்ல அனுமதிப்பதால், இதுபோன்று அசைவ உணவுகளை கோவிலுக்குள் எடுத்து சென்று சாப்பிடும் வாய்ப்பு உருவாகி உள்ளதாக பக்தர்கள் குற்றஞ்சாட்டினர்.