தறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி மோதி பெண் உள்பட 2 பேர் பலி; சென்னையில் சோகம்
தறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி மோதி பெண் உள்பட 2 பேர் பலி; சென்னையில் சோகம்
ADDED : ஜூலை 31, 2025 11:20 AM

சென்னை: பூந்தமல்லி அருகே தறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி மோதிய விபத்தில், சாலையில் நடந்து சென்ற பெண் உள்பட 2 பேர் பலியாகினர்.
சென்னீர் குப்பம் - ஆவடி சாலையில் குடிநீர் வாரியத்தின் ஒப்பந்த லாரி ஒன்று தாறுமாறாக ஓடியுள்ளது. சாலையில் சென்ற வாகனங்கள் மற்றும் நடந்து சென்றவர்கள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே, விபத்தை ஏற்படுத்தி லாரி டிரைவரை பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர். மேலும், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், டிரைவரை கைது செய்து விபத்து குறித்து விசாரித்தனர். அப்போது, டிரைவர் குடிபோதையில் இருந்ததே விபத்துக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.