ADDED : மே 09, 2026 02:06 AM
தேவதானப்பட்டி: தேனி மாவட்டம் பெரியகுளம் ஜி.கல்லுப்பட்டியிலிருந்து டூவீலரில் கொடைக்கானலுக்கு கூலி வேலைக்கு சென்ற பெருமாள்பிரபு 27, நண்பர் ராமராஜ் 33, மீது எதிரே வந்த வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாயினர்.
ஜி.கல்லுப்பட்டி ரைஸ்மில் தெரு வைச் சேர்ந்தவர் பெருமாள்பிரபு. இவரது நண்பர் உசிலம்பட்டி எருமாபட்டி காலனி, கிழக்கு தெருவைச் சேர்ந்த ராமராஜ். இருவரும் ஜி.கல்லுப்பட்டியிலிருந்து- நேற்று முன்தினம் இரவு கொடைக்கானலுக்கு கூலி வேலைக்கு டூ வீலரில் சென்றனர். பெருமாள்பிரபு ஓட்டினார். கொடைக்கானல் ரோடு அம்சாபுரம் பால்கனகராஜ் தோட்டம் அருகே எதிரே வந்த வேன் , டூவீலர் மீது மோதியதில் பெருமாள்பிரபு, ராமராஜ் பலியாயினர். விபத்து ஏற்படுத்திய சிவகங்கை மாவட்டம் கல்லுாராணி மேலக்கோட்டையைச் சேர்ந்த வேன் டிரைவர் அசோக்குமாரை தேவதானப்பட்டி போலீசார் தேடிவருகின்றனர்.
