sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மீண்டும் அமைச்சரானார் செந்தில் பாலாஜி; புதுசு 2; பழசு 2 பேர் பதவியேற்பு!

/

மீண்டும் அமைச்சரானார் செந்தில் பாலாஜி; புதுசு 2; பழசு 2 பேர் பதவியேற்பு!

மீண்டும் அமைச்சரானார் செந்தில் பாலாஜி; புதுசு 2; பழசு 2 பேர் பதவியேற்பு!

மீண்டும் அமைச்சரானார் செந்தில் பாலாஜி; புதுசு 2; பழசு 2 பேர் பதவியேற்பு!

42


UPDATED : செப் 29, 2024 10:35 PM

ADDED : செப் 29, 2024 03:49 PM

Google News

UPDATED : செப் 29, 2024 10:35 PM ADDED : செப் 29, 2024 03:49 PM

42


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: துணை முதல்வராக உதயநிதி இன்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், கோவி செழியன், ஆவடி நாசர் ஆகியோர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

புலி வருது, புலி வருது கதையாக, நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த தமிழக துணை முதல்வர் பதவி விவகாரம், இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. முறைப்படி இன்று துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், சென்னை ராஜ்பவனில் இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடந்தது. இதில், சிறையில் இருந்து ஜாமினில் வந்துள்ள செந்தில் பாலாஜி, பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், கோவி செழியன், ஆவடி நாசர் ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.இவர்களில், ஆவடி நாசர், பல்வேறு சர்ச்சைகளால் கடந்தாண்டு பதவி பறிக்கப்பட்டவர். அவரும் இன்று பதவியேற்றார்.

அமைச்சர்களாக பதவியேற்ற நால்வருக்கும், கவர்னர் ரவி, முதல்வர், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர் பொன்முடிக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்துறையும், மதுவிலக்குத்துறையும் வழங்கப்பட்டுள்ளது.

ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை, நாசருக்கு சிறுபான்மையினர் நலத்துறை, மதிவேந்தனுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை, கயல்விழிக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை, முதல் முறையாக அமைச்சர் பொறுப்பேற்கும் கோவி செழியனுக்கு உயர்கல்வித்துறை வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்த தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள், விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.

தந்தை, மகன் யார், யார்?


நாட்டில் வெவ்வேறு மாநிலங்களில் தந்தைக்கு பிறகு மகன் முதல்வராக வந்த நிகழ்வுகள் நடந்துள்ளன. தந்தை முதல்வராக இருக்கும்போதே துணை முதல்வராக மகன் பொறுப்பேற்ற நிகழ்வுகள் இதற்கு முன் இரண்டு முறை மட்டுமே நடந்துள்ளன. கருணாநிதி முதல்வராக இருந்தபோது, துணை முதல்வராக ஸ்டாலின் பதவி வகித்தார். பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல் முதல்வராக இருந்தபோது, துணை முதல்வராக அவரது மகன் சுக்பீர் சிங் பாதல் பதவி வகித்தார். அதற்கு அடுத்தபடியாக, இப்போது தான், தந்தை முதல்வர், மகன் துணை முதல்வர் என்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது.






      Dinamalar
      Follow us