அவர் வந்தால் என்ன ஆகும்; இருக்கிற எதுவும் மாறாது: சொல்றது யார் தெரியுமா!
அவர் வந்தால் என்ன ஆகும்; இருக்கிற எதுவும் மாறாது: சொல்றது யார் தெரியுமா!
UPDATED : செப் 21, 2024 11:59 AM
ADDED : செப் 21, 2024 11:35 AM

திருச்செந்தூர்: 'உதயநிதி துணை முதல்வராவதால் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை' என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சத்ரு சம்ஹார பூஜை வழிபாடு மற்றும் கட்சி புதிய உறுப்பினர் சேர்க்கையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
'வி.சி.க., நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் தி.மு.க, பங்கேற்பது என்பது திட்டமிட்ட ஒரு டிராமா. அமெரிக்க பயணம் தோல்வி என்பதால், அதை திசை திருப்ப அங்கு வைத்து தயாரிக்கப்பட்ட ஸ்கிரிப்ட்.
உதயநிதி துணை முதல்வராவதால் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.மூன்றாவது முறையாக மோடி அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 100 நாட்களில் 3 லட்சம் கோடி அளவிற்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்துள்ளது.தமிழகத்தில் ரயில்வே துறைக்கு ரூ.6,300 கோடி செலவிட்டு உள்ளது. எல்லை தாண்டி மீன் பிடிக்காமல் இருக்க மீனவர் நலன் கருதி ஜி.பி.எஸ்., கருவி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசால் கைது செய்யப்படும் மீனவர்களை உடனுக்குடன் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி பா.ஜ.,'. இவ்வாறு அவர் கூறினார்.