ADDED : அக் 21, 2024 06:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வரும் 2026ல் அ.தி.மு.க.,விற்கு பழனிசாமி மூடுவிழா நடத்தி விடுவார் என, தினகரன் சொல்கிறார். அ.தி.மு.க.,வை வைத்து, தமிழகம் முழுதும் தவறான வழியில் சொத்து சேர்த்ததை தவிர, அ.தி.மு.க.,விற்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை.
லோக்சபா தேர்தலில் இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்டு, ராமநாதபுரத்தில் ஓ.பி.எஸ், தேனியில் தினகரன் இருவரும் மண்ணை கவ்வினர். அவர்கள் தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்று பழனிசாமி அ.தி.மு.க., பொதுச்செயலராக பதவியேற்றுள்ளார்.
தமிழகத்தில், விடுபட்ட பெண்களுக்கு உரிமைத் தொகை 1,000 ரூபாய் கிடைக்கவில்லை. உதயநிதி துணை முதல்வரானதும் அவர்களுக்கு கிடைக்கும் என்றனர். ஆனால், அவர் அல்வா கொடுத்து வருகிறார்.
- திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்

