ADDED : ஜன 31, 2025 01:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு, வெளிநாட்டில் பயிற்சி பெறுவது, அதற்கான போக்குவரத்து, தங்குமிடம், உணவு உள்ளிட்டவற்றுக்கான செலவு தொகையை, 'எலைட்' உதவி திட்டம் வாயிலாக, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வழங்குகிறது.
அந்த உதவித்தொகையை பெற்ற, தமிழக காது கேளாதோர் பிரிவு டென்னிஸ் வீரர் பிரித்வி சேகர், கடந்த, 24 முதல் 26ம் தேதி வரை, ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடந்த ஆண்களுக்கான, ஆஸ்திரேலிய டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பங்கேற்று சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்.
அவரை நேற்று துணை முதல்வர் உதயநிதி, தலைமை செயலகத்துக்கு அழைத்து பாராட்டினார். அப்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.